ஜியோ ஃபைபர் அறிமுகப்படுத்தும் பொழுது, ஜியோ கிளவுட் வசதிப் பற்றி பேசியிருந்தார் அந்நிறுவனத்தின் சேர்மன் திரு. முகேஷ் அம்பானி. இதனைப் பற்றிய தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
ஜியோ கிளவுட் சேவை, இணைப்பு மற்றும் மற்ற வசதிகளுக்காக, ஜியோ நிறுவனம் உலகின் நம்பர் ஒன் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. சுமார் 10 வருடங்கள் கொண்ட ஒப்பந்தத்தில், மேற்கூறிய வசதிகள் அனைத்தையும், இந்தியாவில் உருவாக்க இந்த நிறுவனங்கள் உள்ளன.
மேலும், அந்நிறுவனத்தின் அறிவிப்பின் படி, இந்தியாவில் இரண்டு இடங்களில், டேட்டா சென்டர் எனப்படும், தகவல் சேமிப்பு இடங்களை உருவாக்க உள்ளது. இதற்காக குஜராத் மற்றும் மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களைத் தேர்வு செய்துள்ளது. இந்த மாநிலங்களில் 2020 முதல் இதற்கானப் பணிகள் துவங்கப்பட உள்ளன.
ஜியோ நிறுவனம், கிட்டத்தட்ட இந்தியாவின் 95% பகுதிகளில், தன்னுடைய சேவையினை வழங்க ஆரம்பித்துவிட்டது. தற்பொழுது, 4ஜி தொழில்நுட்பத்தில் அதிதீவிரமாக செயல்பட்டு வரும் ஜியோ நிறுவனம், 5ஜி தொழில்நுட்பத்திலும் ஆராய்ச்சி செய்து வருகின்றது.