ஜியோ ஃபைபர்! ஜியோ டிவி! ஜியோ ஃபைபர் ப்ரீமியம்! ஜியோ டிவி! அடேங்கப்பா!

17 August 2019 அரசியல்
jiogigafiber.jpg

pic courtesy:Youtube.com

நேற்று நடைபெற்ற கூட்டத்தில், புதிய திட்டங்களை அறிவித்து, அதிரடி காட்டிவிட்டார் அம்பானி. நீண்ட நாட்களாக, காத்திருப்பில் இருந்த, அனைவராலும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஜியோ ஃபைபர் பற்றியத் திட்டத்தை வெளியிட்டார்.

700 ரூபாயில் தொடங்கி 10,000 ரூபாய் வரை இருக்கும் ஜியோ திட்டத்தில், வீட்டிற்கு ஜியோ ஃபைபர் இணைப்பு வழங்கப்பட உள்ளது. சுமார் 100 எம்பிபிஎஸ் திட்டத்தில் தொடங்கி, பின் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் இணைய சேவை வழங்க உள்ளது.

மேலும், இலவச டெலிகாம் வசதியும் வழங்கப்பட உள்ளது. அதே சமயம், உள்நாட்டில் இருந்து, வெளிநாட்டிற்கு பேச விரும்புபவர்கள், 500 ரூபாய் திட்டத்தில் இணைந்து, சர்வேதச நாடுகளுக்கு போன் பேசலாம். இதுவும் அளவில்லாமல் (அன்லிமிடெட்) வழங்கப்பட உள்ளது.

ஜியோ ஃபைபர் வெல்கம் ஆஃப் எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அவர் அறிவித்தார். இந்தத் திட்டத்தின் கீழ் இணையும் வாடிக்கையாளர்கள் தன்னுடைய ஆண்டு சந்தாவைத் தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, இலவச ஹெச்.டி டிவி, 4கே எல்ஈடி டிவி மற்றும் இலவச 4கே செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட உள்ளது.

இதுவரை, ஜியோ ஃபைபர் திட்டத்தில், 1.5 கோடி பேர் இணந்துள்ளனர் எனவும், இனிவரும் காலங்களில் கோடிக்கணக்கான மக்கள் இணைவர் எனவும், நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

அதே போல், ஜியோ ஃபைபர் ப்ரீமியம் என்ற திட்டத்தின் கீழ், திரையில் வெளியாகும் படங்களை, அன்றே முதல் நாள் முதல் ஷோவை பார்க்கும் சேவையும் வழங்கப்பட உள்ளதாக கூறினார். இந்தத் திட்டம், வரும் 2020ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வரும் எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS