இந்தியாவின் நம்பர் ஒன்! அம்பானி பெருமிதம்!

17 August 2019 அரசியல்
ambani.jpg

pic courtesy:Youtube.com

இந்தியாவின் நம்பர் ஒன் தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ நிறுவனம் வளர்ச்சி அடைந்துள்ளதாக, முகேஷ் அம்பானி பெருமிதமாக கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற 42ம் ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பங்குதாரர்கள் முன்னிலையில், அந்நிறுவனத் தலைவர் அம்பானி பேசினார்.

அவ்வாறு அவர் பேசுகையில், இந்தியாவின் நம்பர் ஒன் தொலைத் தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ உள்ளதாகவும், உலக அளவில் தற்பொழுது இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும், அம்பானி தெரிவித்தார்.

ஜியோ தொடங்கி இரண்டே ஆண்டுகள் ஆன நிலையில், இத்தகைய வளர்ச்சியை அடைந்துள்ள ஒரே நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, உள்ளது குறிப்பிடத்தக்கத்து.

HOT NEWS