ஜியோ ஃபைபர் விலை மற்றும் சலுகைகள் ஒரு பார்வை!

12 July 2019 தொழில்நுட்பம்
ind-vs-sl.jpg

தற்பொழுது நாடு முழுவதும் சோதனை முறையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஜிகா ஃபைபர் திட்டத்தை, அமல்படுத்தி வருகிறது. இது தற்பொழுது சோதனை முறையிலேயே உள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், அதிவேக இணைய சேவையை வீட்டில் இருந்து நம்மால் பெற இயலும். இதற்கு முதலில் 4,500 ரூபாயை, டெபாசிட் பணமாக கட்ட வேண்டும் என அறிவித்திருந்த ஜியோ நிறுவனம், தற்பொழுது டெபாசிட் பணத்தை 2,000 ரூபாயாகக் குறைத்துள்ளது. இந்த டெபாசிட் பணம் திரும்பி குறிப்பிட்டக் காலம் கழித்து, வாடிக்கையாளரிடமே வழங்கப்படும் என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதல் மூன்று மாதங்களுக்கு, 100 ஜிபி இலவச டேட்டாவை வழங்குகிறது ஜியோ. பின்னர், நாம் எந்தப் பிளான் வேண்டும் என்றாலும், தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 500 ரூபாய் திட்டத்தில், நாம் 300 ஜிபி டேட்டாவை 50எம்பிபிஎஸ் வேகத்தில் பெற முடியும். இதுவே, இந்தியாவின் மிகக் குறைந்த விலை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

750 ரூபாய் பிளானில், 450 ஜிபி டேட்டா 50 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்க உள்ளது. 600 ஜிபி டேட்டாவை, 950 ரூபாய் திட்டத்தின் கீழ் 100எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்க உள்ளது. 1299 ரூபாய் திட்டத்தின் கீழ் சுமார்750 ஜிபி டேட்டாவை 100 எம்பிபிஎஸ் வேகத்திலும், 1500 ரூபாய் திட்டத்தின் கீழ், சுமார் 900 ஜிபி டேட்டாவை 100 எம்பிபிஎஸ் வேகத்திலும் தர உள்ளது ஜியோ.

இந்த இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கும் மோடம், 2.4GHz b/g/n Wi-Fi என்ற தொழில்நுட்பத்துடன், 5 GHz வைபை வசதியுடன் வருகிறது. இந்த மோடம் வாங்கினால், 1100ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்க உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட காலம் கழித்து, நாம் தேர்ந்தெடுக்கும் திட்டத்திற்கு ஏற்ப டேட்டாவை வழங்கும்.

HOT NEWS