தொடர்ந்து ஏற்பட்டு வந்த நஷ்டம், திடீரென டிராய் நிறுவனமும், லைசென்ஸ் பணத்தைக் கட்டச் சொன்னதன் விளைவு, இவற்றின் காரணமாக, ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் அதிரடியாகத் தங்களுடையக் கட்டணத்தை உயர்த்தின.
இவைகளுக்குப் போட்டியாக இருந்து வரும் ஜியோ, நிறுவனமும் தற்பொழுது தன்னுடையக் கட்டணத்தை சுமார் 39% உயர்த்தி உள்ளது. இதனால், பயனர்கள் தற்பொழுது விரக்தியில் உள்ளனர். 339 ரீசார்ஜ் செய்யும் திட்டமானது, தற்பொழுது 555 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல், 153 ரூபாய் ரீசார்ஜ் பிளானானது, 199 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது. நாளை (06-12-2019) அன்று முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளதாக, ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் தங்களுடைய கஷ்டமர்களைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடி வரும் நிலையில், தற்பொழுது ஜியோ நிறுவனமும் கஷ்டமர்களைத் தக்க வைக்க என்ன செய்யும் எனப் பலரும் எதிர்பார்க்க ஆரம்பித்து உள்ளனர்.