இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதன் காரணமாக, வீட்டில் இருந்த ஐடி ஊழியர்கள் பணி புரிய வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. ஐடி நிறுவனங்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் எனவும் கோரியுள்ளது.
இந்நிலையில், வீட்டில் இருந்து வேலை செய்வதற்காக, புதிய இன்டர்நெட் பேக்கினை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. தன்னுடைய நிறுவனத்தினை ஆரம்பித்தது முதல், தற்பொழுது வரை, தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பலவித சலுகைகள் மற்றும் தள்ளுபடி ஆகியவைகளை வழங்கி வருகின்றது ஜியோ. அதன்படி, தற்பொழுது புதிதாக சலுகை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
251 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 51 நாட்களுக்கு 2 ஜிபி இணைய வசதியினை வழங்க உள்ளது. இதற்கு ஒர்க் ப்ரம் ஹோம் எனவும் பெயர் வைத்துள்ளது. இதனால், தொடர்ந்து 51 நாட்களுக்கு, 2ஜிபி 4ஜி இண்டர்நெட் வசதியினை வாடிக்கையாளர்கள் பெற இயலும். 2ஜிபி முடிந்ததும், இணையத்தின் வேகமானது 64 கேபிபிஎஸ் ஆக குறைந்து விடும்.
இந்த சலுகையில், வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்ஸ் ஆகியவைகளும் அடக்கம். இதனால், இதன் போட்டியாளர்களாக இருக்கும், ஏர்டெல், வோடாபோன், பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்களும் புதிய சலுகைகளை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்துமே, தங்களுடைய சேவையினை எவ்வித இடையூறும் இல்லாமல் வழங்கவும் முடிவு செய்துள்ளன.
ஜியோவில் 11 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 800 எம்பியும், 21 ரூபாய்க்கு 2 ஜிபி டேட்டாவும், 51 ரூபாய்க்கு 6 ஜிபி டேட்டாவும் மற்றும் 101 ரூபாய்க்கு 12 ஜிபி டேட்டாவும் வழங்க முடிவு செய்துள்ளது. இதனால், ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.