இனி ஜியோ இலவசம் இல்லை! அதிரடி அறிவிப்பால் பயனர்கள் அதிர்ச்சி!

11 October 2019 தொழில்நுட்பம்
jio.jpg

இனி ஜியோவில் இலவசமாக பேச இயலாது. அப்படியொரு அறிவிப்பினை ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால், ஜியோ பயனர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஜியோ டூ ஜியோ சேவை, தொடர்ந்து இலவசமாகவே இருக்க உள்ளது. நீங்கள் உங்கள் ஜியோ போனில் இருந்து, இன்னொரு ஜியோ போனிற்கு பேசும் பொழுது, கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. ஆனால், உங்கள் ஜியோ போனில் இருந்து மற்ற நிறுவனங்களான ஏர்டெல், வோடாபோன் உள்ளிட்ட நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்தும் பொழுது, கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

மேலும், 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய் மற்றும் 100 ரூபாய் விலைகளில் ரீசார்ஜ் கார்டுகளும் விற்கப்பட உள்ளன. மேலும் பத்து ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் 1 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும். மேலும், 124 நிமிடங்கள் பேசிக் கொள்ளலாம். 20 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 249 நிமிடம் பேசிக் கொள்ளலாம், அத்துடன் 2 ஜிபி டேட்டா இலவசமாக கிடைக்கும். 50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 5 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்பட உள்ளது. 656 நிமிடங்கள் பேசிக் கொள்ளலாம். மேலும், 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 1362 நிமிடங்கள் பேசும் வசதியும், 10 ஜிபி டேட்டாவும் வழங்கப்பட உள்ளது.

ஒரு நிமிடத்திற்கு ஆறு பைசா வசூலிக்கப்பட உள்ளதாக, அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இது வரும் புதன் கிழமை முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS