இந்தியாவில் தற்பொழுது இரண்டாவது மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோ தற்பொழுது தர்ம சங்கடத்தில் உள்ளது. இதற்கு காரணம், அதன் சேவையே ஆகும்.
இந்தியாவில் இயங்கி வரும் தொலைத் தொடர்பு நிறுவனங்களான, ஏர்டெல், ஜியோ, வோடாபோன், மற்றும் ஐடியா நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு முறையான சேவை வழங்குவதில்லை என்ற புகாரை அடுத்து இந்தியாவின் தொலைத்தொடர்பு ஆணையமான டிராய் இந்நிறுவனங்களுக்கு அபராதத்தை விதித்துள்ளது.
தரமற்ற சேவை, இணைப்புத் துண்டிப்பு மற்றும் பல காரணங்களால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக டிராய் கூறியுள்ளது. அதன்படி, முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் சுமார் 34 லட்சம் வரை அபராதம் செலுத்தக் கட்டளையிட்டுள்ளது. மற்ற நிறுவனங்களான ஏர்டெல், வோடாபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களுக்கு சுமார் 11 லட்சம் வரை அபராதம் விதித்துள்ளது.
ஐடியா நிறுவனம் வோடாபோனுடன் இணைவதற்கு அதிக கால அவகாசம் எடுத்துக் கொண்டதால், 12.5 லட்சம் ரூபாயை அபராதமாக கட்ட வேண்டியுள்ளது. மேலும், அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும், தங்களுடைய செல்போன் டவர்களின் உயரத்தைக் குறைக்க வேண்டும் என டிராய் நிறுவனம், புதிய விதிகளின் படி, அரசாணை வெளியிட்டுள்ளன.
குறிப்பாக, ஜியோவின் டவர்கள் மிக உயரமானதாகவே இந்தியா முழுவதும் உள்ளன. இந்த எதிர்பாராத அபராதம் மற்றும், டவர் பிரச்சனையால் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளது.