இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரியத் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ நிறுவனம், தற்பொழுது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபரினை அறிவித்துள்ளது.
தற்பொழுது இந்தியா முழுவதும், ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் அநாவசியமாக வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இணையப் பயன்பாடானது, அதிகரித்து உள்ளது. அனைவரும் வீட்டிலேயே இருப்பதால், இணையத்தினைப் பயன்படுத்தி வேலை செய்கின்றனர். பொழுது போக்கிற்காகவும், இணையத்தினை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.
இதனால், இணைய சேவையை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல வசதிகளை அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில், தற்பொழுது ஜியோ நிறுவனம் புதிய சலுகையை அறிவித்து உள்ளது. அதன்படி, ஜியோ லிங்க் மோடம் வைத்திருப்பவர்களுக்கு 699 ரூபாயில் புதிய சலுகை ஒன்றினை அறிவித்துள்ளது.
இந்த சலுகையில், 28 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகின்றது. மொத்தமாக, 156 ஜிபி டேட்டவானது இதில் கிடைக்கும் என்று ஜியோ நிறுவனம் கூறியுள்ளது. இந்த மோடமானது, ஜியோ 4ஜி சேவையினை வழங்குவதற்கு முன்பே வெளியானது. தற்பொழுது இது கடைகளில் கிடைக்காது. இதில், ஒரு நாளைக்கு 5 ஜிபி டேட்டா கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. 16 ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் வழங்கப்படுகின்றது.
அதே போல் மற்ற விலைகளிலும், புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. 2099 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 98 நாட்களுக்கு வாலிடிட்டியுடன் 538 ஜிபி டேட்டா வழங்கப்பட உள்ளது. ஒரு நாளைக்கு 5 ஜிபி டேட்டாவினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு இலவசமாக, 48 ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கப்படுகின்றது.
4,199 ரூபாய்க்கு ஜியோ லிங்க்கினை ரீசார்ஜ் செய்தால், 196 நாட்களுக்கு, 1076 ஜிபியானது வழங்கப்படுகின்றது. ஒரு நாளைக்கு 5 ஜிபி டேட்டாவானது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இலவசமாக 96 ஜிபி டேட்டா வழங்கப்பட உள்ளது.