பாகிஸ்தான், சீனாவிற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஜோ பிடன் ஆதரவு!

16 August 2020 அரசியல்
kamalaharris.jpg

அமெரிக்கர்களின் ஆதரவினை திரட்டுவதற்காக அங்கு தேர்தல் நடக்கின்றதோ, இல்லையோ இந்தியர்களின் ஆதரவினை அவர்கள் பெரிதும் நம்புகின்றனர்.

அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் 3ம் தேதி அன்று, அதிபருக்கானத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் தீவிரமாகப் போட்டியிடுகின்றனர். குடியரசுக் கட்சியின் சார்பில் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். தற்பொழுது அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்பிற்கு, இந்தியாவில் நமஸ்தே டிரம்ப் என்ற விழா நடத்தப்பட்டது.

அதில் கலந்து கொண்ட டிரம்ப், பிரதமர் மோடியின் ஆதரவினைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியர்களின் ஆதரவினையும் அமெரிக்காச் செல்லும் பொழுது அள்ளிச் சென்றார். அதே போல், அங்கு அவ்வப்பொழுது இந்தியாவினைப் புகழ்ந்து பேசி வருகின்றார். இந்தியாவிடம் ஹைட்ரோகுளோராக்ஸிகுயின் மாத்திரையினையும் அவர் வாங்கினார். அதோடு, அதற்காக இந்தியாவிற்கு பல உதவிகளை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

டொனால்ட் ட்ரம்பிற்கு, அமெரிக்காவில் வசிக்கின்ற இந்தியர்களின் ஆதரவு அதிகமாகவே உள்ளது. அதனால், அவர் செல்வாக்கும் உயர்ந்துள்ளது. அதே போல், இந்தியர்களின் ஆதரவினைப் பெரும் முயற்சியில் ஜனநாயகக் கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதற்காகவே கமலா ஹாரீசிற்கு துணை ஜனாதிபதிக்கான பதவிக்கு போட்டியிட, வாய்ப்பு அளித்துள்ளது ஜனநாயகக் கட்சி. அவ்வாறு ஒரு இந்தியர் போட்டியிட்டால், கண்டிப்பாக அங்குள்ள இந்தியர்களின் ஆதரவினைப் பெற இயலும் என்று கணித்து செயல்பட்டு வருகின்றனர்.

தற்பொழுது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நல்ல உறவு நிலை நீடித்து வருகின்றது. அதே போல், தற்பொழுது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் மோதல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. சீனாவிற்கும் அமெரிக்காவும் இடையில், ஏற்கனவே மோதல் நடைபெற்று வருகின்றது. இதனால், இந்தியாவிற்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகின்றது.

அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கையானது, கிட்டத்தட்ட 48 லட்சம் ஆகும். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையானது 2019 கணக்கெடுப்பின் படி, 32 கோடியே 83 லட்சம் ஆகும். அமெரிக்காவில் உள்ள 4 கோடி 13 லட்சம் வெளிநாட்டு மக்களில், இந்தியர்களின் அளவானது 5% ஆகும். இதனால், இவர்களின் வாக்கினைக் குறியாக வைத்தும் செயல்பட்டு வருகின்றனர்.

தற்பொழுது ஜனநாயகக் கட்சிக்காகப் போட்டியிடும் ஜோ பிடன், தற்சமயம் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். அவர் கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு, வெளியில் வந்தார். அப்பொழுது, அங்கு இந்தியர்கள் குழுமி இருந்தனர். அவர்களின், சீனா மற்றும் பாகிஸ்தான் விவகாரத்தில், நான் இந்தியாவிற்கு ஆதரவு வழங்குவேன் எனக் கூறியுள்ளார். இது அங்குள்ள இந்தியர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தொடர்ந்து, இந்தியாவினை வைத்து லாவகமாக, சீனாவிற்கு எதிராக காய் நகர்த்தி வந்த அமெரிக்காவின் அரசியலையே, இந்திய மக்கள் தான் நகர்த்துகின்றனர் என்பது வேடிக்கையான விஷயம் ஆகும்.

HOT NEWS