அமெரிக்காவினருக்கு ஒரு லட்ச உதவித் தொகை! ஜோ பிடன் அதிரடி!

16 January 2021 அரசியல்
joebiden2.jpg

அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் உதவித் தொகையினை வழங்க உள்ளதாக, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள ஜோ பிடன் தெரிவித்து உள்ளார்.

வருகின்ற 20ம் தேதி அன்று ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடன், அமெரிக்காவின் அதிபராக பதவியேற்க உள்ளார். அவர் கொரோனா வைரஸ் குறித்தும், அதற்கான உதவிகள் குறித்தும் தொடர்ந்து பல விஷயங்களையும், திட்டங்களையும் அறிவித்து வருகின்றார். அமெரிக்காவில் தான், உலகளவிலேயே கொரோனா வைரஸ் பரவலானது அதிகமாக உள்ளது. இந்த வைரஸால், அமெரிக்காவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

அங்கு இந்த வைரஸ் பரவல் காரணமாக, பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு 138 லட்சத்து 811 கோடியினை நிவாரண நிதியாகவும், உதவித் தொகையாகவும் அறிவித்து உள்ளார். அவர் அதிபராக பதவி ஏற்றதும், இந்தப் பணமானது வழங்கப்பட உள்ளது. தற்பொழுது வேலை இல்லாதவர்களுக்கு வாரம் 21,000 ரூபாயினை வழங்கி வருகின்றது அமெரிக்க அரசு. அதனை 29,000 ரூபாயாக வழங்க ஜோ பிடன் முடிவு செய்துள்ளார்.

அதே போல், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் சுமார் ஒரு லட்ச ரூபாயினை, நிவாரணத் தொகையாக வழங்கவும் முடிவு செய்துள்ளார். அமெரிக்க செனட் சபை ஒப்புதல் வழங்கும் பட்சத்தில், இந்தப் பணமானது வழங்கப்படும் என்றுக் கணிக்கப்பட்டு உள்ளது.

HOT NEWS