அமெரிக்க தேர்தல்! ஜோ பிடன் மகத்தான வெற்றி! டிரம்ப் ஆதரவாளர்கள் சோகம்!

07 November 2020 அரசியல்
joebidenwin.jpg

அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில், டெமோக்ராடிக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரீஸ் ஆகியோர், வெற்றி பெற்றுள்ளனர்.

ஆட்சியில் உள்ள ரிபப்ளிக் கட்சியின் டொனால்ட் ட்ரம்பும், துணை அதிபர் மைக் பென்சும் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாகவே, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த சூழலில், டெமோக்ராடிக் கட்சியின் சார்பில், அதிபர் பதவிக்கு ஜோ பிடனும், துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரீஸூம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் தொடர்ந்து பல இடங்களில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர், மாறி மாறி வசைபாடிக் கொண்டனர். இந்த சூழலில், ட்ரம்பிற்கு திடீரென்று கொரோனா தொற்றுப் பரவியது. இந்தத் தொற்றால், ட்ரம்பின் பிரச்சாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த சூழலில், முழுமையாக சிகிச்சைப் பெறாமலேயே டொனால்ட் ட்ரம்பும், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்தார்.

தற்பொழுது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்ற சூழலில், ஜோ பிடனும் அவருடையக் கட்சியினரும் நடைபெற்றத் தேர்தலில் முறைகேடு செய்திருப்பதாக கூறியிருக்கின்றார் ட்ரம்ப். இதனைப் பலரும் உலகளவில் கிண்டல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS