உலகளவில் புகழ் பெற்ற நிறுவனம் தான் இந்த ஜான்சன் & ஜான்சன். தற்பொழுது அந்நிறுவனத்திற்கு சுமார் 572 மில்லியன் அமெரிக்க டாலர்களை, அபராதமாக விதித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.
1980களில், தன்னுடைய டைலனால் மற்றும் கோடின் மருத்துகளுக்காக, ஓபியம் என்றப் போதைப் பொருளினை, பயன்படுத்தியதாகப் புகார் எழுந்தது. இந்த நிறுவனத்தின் வலி நிவாரண மருந்துகளில் இந்த ஓபியம் பயன்படுத்தப்பட்டதாக, புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்துள்ளன. மேலும் நார்மென் எனும் பெயரினை உடைய புர்டு என்ற மருந்தும் சந்தையில் சக்கைப் போடு போட்டுள்ளது.
தொடர்ந்து புகார்களும் ஒரு பக்கம் எழுந்து வந்த நிலையில், நீதிமன்றம் இதனை விசாரித்தது. இதில், ஓபியம் எனும் போதைப் பொருளைப் பயன்படுத்தியதற்காகவும், இதனை அதிகமாகப் பயன்படுத்தி பொதுமக்கள் இறந்துள்ளனர் என்பதற்காகவும், 572 மில்லியன் அமெரிக்க டாலர்களை நீதிமன்றம் அபராதமாக விதித்துள்ளது.
இந்நிலையில், ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் டால்கம் பவுடரை, பயன்படுத்தியப் பெண்மணிக்கு கேன்சர் நோய் வந்ததால், அந்தப் பிரச்சனையும் நிலுவையில் உள்ளது.
எவ்வாறு இருப்பினும், இந்த அபராதத் தொகையினை அதன் வருமானத்துடன் ஒப்பிடுகையில், வெறும் தூசு தான். அந்த அளவிற்கு அதன் வருமானமும், அதன் பங்கு வர்த்தகமும் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.