விரைவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும்! ஜேபி நட்டா பாய்ச்சல்!

20 October 2020 அரசியல்
jpnaddaspeech.jpg

மேற்கு வங்கத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஜேபி நட்டா, விரைவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்து உள்ளார்.

அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தற்பொழுதே, அம்மாநிலத்தில் பாஜக தன்னுடைய பிரச்சாரக் கூட்டங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக நடத்த ஆரம்பித்து விட்டது. நேற்று, மேற்கு வங்கம் சென்ற பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா அங்கிருந்த விவசாயிகள், பழங்குடியின மக்கள், தலித்கள் உள்ளிட்டப் பிறப் பிரிவினர்களுடன் உரையாடினார்.

அவர் பேசுகையில், மோடி அரசு கொண்டு வந்த விவசாயிகள் உதவித் தொகை திட்டத்தினை, மேற்கு வங்க மாநில அரசு அமல்படுத்தாமல் உள்ளது. தொடர்ந்து, இந்து மதத்தினைச் சேர்ந்த மக்களுக்கு, மம்மதா பேனர்ஜி துரோகம் செய்து கொண்டே உள்ளார். விரைவில் மேற்கு வங்கத்தில், பாஜக ஆட்சி மலரும். அதன் பின்னர், விவசாய திட்டங்கள் அனைத்தும், இங்கு நிறைவேற்றப்படும். அவ்வாறு செய்தால், இங்குள்ள 75 லட்ச விவசாயிகள் அதிகப் பயனடைவர் எனக் கூறியுள்ளார்.

HOT NEWS