பாஜக தலைவரான ஜேபி நட்டாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து!

21 January 2020 அரசியல்
jpnadda.jpg

பாஜக தலைவரின் தலைவராக, ஜேபி நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து உள்ளனர்.

நேற்று காலை 10 மணி முதல் 12.30 மணி வரை, கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில், பாஜகவில் உள்ள விருப்பமுள்ளவர்கள், தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதனால், பாஜக கட்சியின் செயல் தலைவர் பொறுப்பில் இருந்த ஜேபி நட்டா தன்னுடைய வேட்புமனுவினை தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து, யாரும் தங்களுடை வேட்பு மனுவினை தாக்கல் செய்யவில்லை.

இதனையடுத்து, வாக்குப் பதிவானது, யாராவது வேட்புமனுவினைத் தாக்கல் செய்தால் இன்று காலை வரை நடக்க இருந்தது. ஆனால், யாரும் வேட்புமனுவினைத் தாக்கல் செய்யவில்லை என்பதால், ஜேபி நட்டா போட்டியின்றி பாஜக கட்சியின் தலைவராக, தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு, நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் பாஜக தலைவரும், இந்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தன்னுடைய வாழ்க்களை தெரிவித்துள்ளனர்.

அமித் ஷா, கடந்த 2014ம் ஆண்டு பாஜக கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். அப்பொழுதில் இருந்து, பாஜக கட்சியானது அசுர வேகத்தில் வளர்ந்தது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், அதிக இடங்களில் வென்று பாஜக ஆட்சி அமைத்தது. இந்நிலையில், பிரதமர் மோடியின் மந்திரி சபையில், உள்துறைச் செயலாளராக அமித் ஷா பதவியேற்றார். இதனையடுத்து, பாஜக கட்சிக்கு அடுத்தத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தது.

அடுத்தத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை அமித் ஷா தலைவராகவும், செயல்தலைவராக ஜேபி நட்டாவும் நீடித்தனர். மோடி மற்றும் அமித் ஷாவிற்கு நட்புடன் நடந்து கொண்ட ஜேபி நட்டா, தற்பொழுது பாஜக தலைவராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுள்ளார்.

HOT NEWS