காங்கிரஸ் சீனா இடையில் ரகசிய உறவு! 3 லட்சம் டாலர் பெற்றுள்ளது!

26 June 2020 அரசியல்
jpnaddaspeech.jpg

காங்கிரஸ் கட்சிகும் சீனாவிற்கும் இடையில், இரகசிய உறவு உள்ளதாகவும், சீனாவில் இருந்து 3 லட்சம் டாலர் பணமானது, காங்கிரஸ் கட்சிற்கு வந்துள்ளது எனவும் பாஜக தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.

தற்பொழுது சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையில் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகின்றது. இந்நிலையில், பாஜக சார்பில், மோடி ஆட்சியின் முதலாம் ஆண்டு சாதனைகள் குறித்து, விளக்கக் காணொளிகள் மூலம், அக்கட்சியின் தலைவர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில், பாஜக தலைவர் ஜேபி நட்டா நேற்று வீடியோ மூலம் மத்தியப் பிரதேசத்தில் ஜன் சாமாவாத் என்றப் பேரணியில் பேசினார்.

அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்கும், சீனாவிற்கும் இடையில் இரகசிய உறவு உள்ளது. கடந்த 2005-2006ம் ஆண்டுக் காலக் கட்டத்தில், காங்கிரஸ் கட்சியானது, சீனத் தூதரகத்திடம் இருந்து மூன்று லட்சம் டாலர்களை நன்கொடையாகப் பெற்றுள்ளது என்றுக் கூறியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு, சீனத் தூதரக அதிகாரிகளுடன் ராகுல்காந்தி பேசியதாகவும், காங்கிரஸ் கட்சியானது கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியினை வைத்து, அரசியல் செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

HOT NEWS