ஜூமான்ஜி-2 திரைவிமர்சனம்!

27 December 2019 சினிமா
jumani2.jpg

முதல் பாகத்தின் வெற்றியினைத் தொடர்ந்து, ஜூமான்ஜி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. ஜூமான்ஜி தி நெக்ஸ்ட் லெவல் என்றப் பெயரில் இந்தப் படம் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்திலும், ராக் நடித்துள்ளார். அதே கதாப்பாத்திரங்கள் இந்தப் படத்திலும் உள்ளன. என்ன, பெயரும் இடமும் மட்டும் கொஞ்சம் வேறு. பொதுவாக, பேண்டசி படங்களுக்கு என்று ஒரு ஸ்டைல் உள்ளது.

குடும்ப செண்டிமென்ட், பெண்களை காப்பாற்றுவது, தன்னுடைய உயிரினைக் கொடுத்து மற்றவர்கள் உயிரைக் காப்பாற்றுவது, சாகசம் செய்வது என அனைத்துமே பேண்டசி படங்களில் இருக்கும். இந்த ஜூமான்ஜி படத்திலும் உள்ளது.

கதையென்று பெரிதாக எதுவும் இல்லை. முதல் பாகத்தின் அதே கதை தான் இந்தப் பாகத்திலும். படத்தின் பெயரிலேயே நீங்கள் புரிந்து கொள்ளலாம், இந்தப் படம் ஜூமான்ஜி விளையாட்டின் அடுத்த பகுதிக்கு செல்லும் என்று.

இந்த ஜூமான்ஜி கதையினை வைத்து, பல படங்கள் ஹாலிவுட்டில் வந்துள்ளன. அனைத்துமே ஹிட் தான். ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், அது எப்படி ஒரே கதையை மாற்றி மாற்றி எடுத்தாலும், ஹாலிவுட் ரசிகர்கள் சலிக்காமல் பார்க்கின்றார்கள் என்று! எது எப்படியோ, இந்தப் படமும் ஹிட்டாகி விட்டது.

ஸ்பென்சரும் அவருடைய நண்பர்களும், இந்த ஜூமான்ஜி விளையாட்டினை விளையாட ஆரம்பிக்கின்றனர். அவர்கள், அந்த விளையாட்டிற்குள் சென்று விடுகின்றனர். அவ்வாறு சென்றவர்களுக்கு மூன்று வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்படுகின்றது. அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, அந்த விளையாட்டில் வெல்ல வேண்டும். ஒரு வேளை, மூன்று வாய்ப்புகளை தவறவிட்டுவிட்டால், உயிர் விளையாட்டில் மட்டுமல்ல, உண்மையிலேயும் போய் விடும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நண்பர்கள் எவ்வாறு விளையாடினார்கள், அவர்கள் வெற்றிப் பெற்றார்களா இல்லையா என விறுவிறுப்பாகவும், நகைச்சுவையாகவும் கூறியுள்ளனர். ராக் உடல் அமைப்பிற்கு சண்டைக் காட்சிகள் தான் சாத்தியம் எனப் பலர் கூறினார். ஆனால் அவரோ, சண்டைக் காட்சிகளில் மட்டுமல்ல, காமெடி காட்சிகளும் தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்து வருகின்றார்.

மொத்தத்தில் ஜூமான்ஜி-2 மற்றொரு சாகசப் பயணம்

ரேட்டிங் 3/5

HOT NEWS