Credit: Lyca
நேற்று நடைபெற்ற பிகில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் ரசிகர்கள் சண்டையை விட்டுவிட்டு, சமூகப் பிரச்சனைகளுக்காக ட்ரெண்ட் செய்யுங்கள் என்று, போகிறப் போக்கில் சொல்லிவிட்டார்.
அவ்வளவு தான்! விஜய் என்ன சொன்னாலும், அதனை வேத வாக்காக கருதும் அவருடைய ரசிகர்கள், இப்பொழுது, அவர் கூறியதை செய்துவிட்டனர். ஆம், சென்னையில், பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீக்கு நீதி வேண்டும் என்று டிவிட்டரில், என்ற ஹேஸ்டேக்கில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இதுவரை ஒன்றரை லட்சம் ட்வீட்களைத் தாண்டி, இந்த ஹேஸ்டேக் இந்திய அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது.