கனடாவில் தேர்தல் நேரத்தில் சங்கடம்! ஜஸ்டின் மன்னிப்பு கோரினார்!

20 September 2019 அரசியல்
justintrudeau.jpg

twitter.com/@SaranjitSingh_

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினை, தெரியாத தமிழர்களே கிடையாது. தீபாவளி முதல் பொங்கல் வரை என, அனைத்துப் பண்டிகைகளுக்கும் தமிழில் வாழ்த்துத் தெரிவித்தவர். அவர் தற்பொழுது தர்ம சங்கடத்தில் சிக்கியுள்ளார்.

அவர், கனடாவின் இளம் பிரதமர் ஆவார். அவர், அந்நாட்டு காதல் மன்னனாகவும் பார்க்கப்படுகிறார். அவருக்கென்று, தனிப் பெண் ரசிகர்கள் படையே உண்டு. அவர், 2002ம் ஆண்டு நடைபெற்ற, ஒரு நிகழ்ச்சியில், உலகப் புகழ் பெற்ற கதாப்பாத்திரமான, அலாவுதீன் போல உடை அணிந்து கொண்டு பெண்களுடன் நடனமாடினார். அப்பொழுது, அவர் முகத்தில் ப்ரவுன் கலரில் மேக்கப் செய்திருந்தார்.

அது தற்பொழுது, விவாதப் பொருளாகவே கனடா நாட்டில் மாறிவிட்டது. அது எப்படி, அவர் செய்யலாம் எனப் பலரும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், அவர் நேற்று அது விளையாட்டுத்தனமாக செய்தது எனவும், அதில் யாரையும் காயப்படுத்துவதற்கு எதுவும் இல்லை எனவும் கூறினார். அதோடு, அந்த செயலுக்காக தாம் வருத்தம் தெரிவிப்பதாகவும், அதற்கு மன்னிப்பும் கோரினார்.

இந்த நிகழ்வு தற்பொழுது, கனடா நாட்டின் அரசியலில் புயலை உருவாக்கியுள்ளது. அங்கு நாடாளுமன்றத் தேர்தலுக்கு, இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், இந்த சம்பவத்தால் வாக்கு வங்கிக் குறையுமோ என, ஆளுங்கட்சியினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

HOT NEWS