விவசாயிகளுக்கு ஆதரவு தொடரும்! கனடா பிரதமர் அதிரடி!

06 December 2020 அரசியல்
justintrudeaufarmers.jpg

விவசாயிகளின் போராட்டத்திற்கு, கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ மீண்டும் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் கடந்த 9 நாட்களாக, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் மோடி தலைமையிலான அரசானது, மூன்று புதிய வேளாண் மசோதாக்களை அறிமுகம் செய்தது. அந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லியில் தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தற்பொழுது ஹரியனா, ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

தொடர்ந்து 5 முறைக்கு மேல் மத்திய வேளாண் துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும், எவ்வித உடன்பாடும் எட்டப்படாததால் தற்பொழுது வரை இந்தப் போராட்டமானது தொடர்கின்றது. இந்த சூழலில், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, உலகம் முழுவதும் வாழ்கின்றப் பல இந்தியர்களும் போராட்டங்களில் குதித்து உள்ளனர். இது குறித்து பேசிய ஜஸ்டீன் ட்ரூடோ, நேர்மையாகப் போராடுகின்ற இந்திய விவசாயிகளுக்கு என்னுடைய ஆதரவினைத் தெரிவித்து கொள்கின்றேன்.

கனடா அவர்களுக்குத் துணை நிற்கும் என்றுக் கூறினார். இந்த சூழலில், இதற்குக் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்த மத்திய அரசு, அது குறித்து கனட வெளியுறவுத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இது குறித்து, தனியார் செய்தி நிறுவனம் ஒன்று, கனடா பிரதமரிடம் கேள்வி எழுப்பியது. அதற்குப் பதிலளித்த ட்ரூடோ, உலகில் உள்ள நேர்மையாகப் போராடும் விவசாயிகள் அனைவருக்கும் கனடாவும், நானும் துணை நிற்போம் என்றார். இது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

HOT NEWS