கனடா அதிபரின் மனைவிக்கு கொரோனா வைரஸ்! இவருக்கா இப்படியொரு நிலைமை?

13 March 2020 அரசியல்
jtrudeauwife.jpg

கனடா அதிபர் ஜஸ்டீன் ட்ரூடோவின் மனைவிக்கு, கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் பெரும் அளவில் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் பாதிப்பின் காரணமாக, இதுவரை 4,900 பேர் மரணமடைந்துள்ளனர். 1,50,000க்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். தற்பொழுது வரை இந்த நோய் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், உலகின் பல முக்கிய நிகழ்ச்சிகள் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. சமீபத்தில் இங்கிலாந்து சென்று வந்த கனடா நாட்டு அதிபர் ஜஸ்டீன் ட்ரூடோவின் மனைவி சோஃபிக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட மருத்துப் பரிசோதனையில், இது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, கனடா நாட்டு அதிபரும், அவருடைய மனைவியும் அடுத்த 14 நாட்களுக்குத் தனிமைப் படுத்தப்பட உள்ளனர்.

HOT NEWS