1200கிமீ சைக்கிள் பயணம்! தந்தையை சுமந்த தங்க மகள்!

23 May 2020 அரசியல்
jyotikumari.jpg

தன்னுடைய காயம் அடைந்த தந்தையை, சைக்கிளில் அமர வைத்து 1200 கிலோ மீட்டர் ஓட்டி தன்னுடைய சொந்த ஊரினை அடைந்த பெண் பரபரப்பினை ஏற்படுத்தி இருக்கின்றார்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, வருகின்ற மே31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் பல லட்சம் புலம் பெயரும் தொழிலாளர்கள், சாலையில் வெறும் காலில் நடந்தே தங்களுடைய சொந்த ஊருக்கு செல்கின்றனர். மேலும், பலர் இந்தப் பிரச்சனைக் காரணமாக பலரும் உயிரிழந்துள்ள சம்பவமும் நடைபெற்று உள்ளது.

அவர்களுக்காக தற்பொழுது 15 சிறப்பு ரயில்களை, மத்திய அரசு இயக்கி வருகின்றது. இதற்கிடையே, பீகாரில் 15 வயதுடைய சிறுமி, தன்னுடைய தந்தையை 1200 கிலோமீட்டர் பயணம் செய்து அழைத்து வந்துள்ளார். ஹரியானவில் உள்ள குருகிராம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் மோகன் பஸ்வான். இவருக்கு சமீபத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, காயம் ஏற்பட்டது.

ஆட்டோ ஓட்டி வந்த அவரால், இனி ஓட்ட இயலாது எனத் தெரிந்து கொண்ட உரிமையாளர், ஆட்டோவினைப் பெற்றுக் கொண்டார். இனி இங்கு இருந்தால், பிரயோஜனம் இல்லை என்ற நிலையில், தன்னுடைய 15 வயது மகளான ஜோதி குமாரிக்கு, கையில் இருந்த காசினை வைத்துக் கொண்டு ஒரு சைக்கிளை வாங்கித் தந்துள்ளார்.

அதனைப் பயன்படுத்தி நம்முடைய சொந்த ஊருக்குச் சென்றுவிடலாம் என முடிவு செய்து இருக்கின்றனர். அதன்படி மே மாதம் 10ம் தேதி தொடங்கி சுமார், ஏழு நாட்களாக இரவும், பகலுமாகத் தொடர்ந்து சைக்கிளிலேயே தன்னுடையத் தந்தையை வைத்துக் கொண்டு மே 16ம் தேதி தன்னுடைய ஊருக்கு பயணித்து சென்றுள்ளார் அந்த 15 வயது ஜோதி.

இந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. இதனைக் கேள்விப்பட்ட தேசிய சைக்கிள் பெடரேஷன், அந்தப் பெண்ணை சோதனை செய்ய உள்ளது. சோதனையில் வெற்றிப் பெறும் பட்சத்தில் அவருக்கு பயிற்சியாளராக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS