பாஜகவிற்கு செல்லும் ஜோதிராதித்யா சிந்தியா! இதுவும் முக்கியக் காரணம் தான்!

11 March 2020 அரசியல்
jyotiradityamscindia.jpg

தற்பொழுது மத்தியப்பிரதேச அரசியலில், புதிய புயலினை உருவாக்கி உள்ள ஜோதிராதித்யா சிந்தியா விரைவில் அவர் பாஜகவில் சேர்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது அவருடையக் குடும்பமே ஆகும்.

தன்னுடைய 19 ஆதரவு எம்எல்ஏக்களுடன், பதவியினை ராஜினாமா செய்த சிந்தியா, தற்பொழுது பாஜகவிடம் நேசக்கரம் நீட்டியுள்ளார். இதனால், மத்தியப் பிரதேசத்தில் பாஜகவின் ஆட்சி மலரும் நிலை ஏற்பட்டு உள்ளது. அவர் குடும்பத்தில், அவருடைய தந்தையும், சிந்தியாவும் மட்டுமே காங்கிரஸ் கட்சியினராக இருக்கின்றனர்.

மற்ற அனைவருமே, பாஜகவினைச் சேர்ந்தவர்கள். அரசக் குடும்பத்தினராக இருக்கும் சிந்தியாவின் குடும்பத்தினர், காங்கிரஸ் கட்சியினை வெறுக்கின்றனர். தற்பொழுது, சிந்தியாவும் காங்கிரஸ் கட்சியினை விட்டு விலகிவிட்டதால், அவர் விரைவில் பாஜகவில் சேர்வார் என அவர்கள் நம்புகின்றனர். அவ்வாறு சேரும் பட்சத்தில், மொத்த அரசக் குடும்பமும், பாஜகவினைச் சார்ந்ததாக மாறிவிடும்.

அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதனை, அவருடைய குடும்பத்தினர் அனைவரும் வரவேற்றுள்ளனர். இதனால், காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில், தொய்வு ஏற்பட்டுள்ளது.

HOT NEWS