ஜோதிர் ஆதித்யா ராஜினாமா! ஆட்சி அமைக்கும் பாஜக! மத்தியப் பிரதேசத்தில் விரைவில் தேர்தல்?

11 March 2020 அரசியல்
jyotiradityamscindia1.jpg

காங்கிரஸ் கட்சியின் முக்கியமான மத்தியப் பிரதேச உறுப்பினர்களுள் ஒருவரான, ஜோதிர் ஆதித்யா தற்பொழுது தன்னுடைய எம்எல்ஏ பதவியினை ராஜினாமா செய்துள்ளார். இதனால், ஆட்சியும் கலையும் வாய்ப்புள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில், காங்கிரஸ் கட்சியானது, தற்பொழுது ஆட்சி நடத்தி வருகின்றது. கடந்த 15 ஆண்டுகளாக, மத்தியப் பிரதேசத்தினை பாஜக கட்சியே ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில், 74 வயதுடைய கமல்நாத்தினை தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகின்றது. அதில், எம்எல்ஏவாக இருக்கும், ஜோதிர் ஆதித்யா சிந்தியா மன வருத்தத்தில் இருந்ததாக, கூறப்படுகின்றது.

நான்கு முறை எம்எல்ஏவாக இருந்து வந்த ஜோதிராதித்யா சிந்தியா, தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனவும், கமல்நாத்தினை விட, தானே முக்கியம் எனவும் கூறியிருக்கின்றார். ஆனால், கமல்நாத் மட்டுமே, தொடர்ந்து முக்கியப் பொறுப்புகளில் இருந்ததால், மார்ச் 10ம் தேதி அன்று, பிரதமர் நரேந்திர மோடியினை அவருடைய இல்லத்திற்கு சென்று சந்தித்தார். மேலும், அங்கு அவருடைய சந்திப்பில், அமித் ஷாவும் கலந்து கொண்டார்.

இந்நிலையில், இன்று காலையில் சபாநாயகரைச் சந்தித்த ஜோதிராதித்யா சிந்தியா தன்னுடைய ராஜினாமா கடிதத்தினை அளித்தார். மேலும், தன்னுடையக் கடிதத்தினை இணையத்திலும் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, தன்னுடைய ஆதரவாளர்களான 19 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்துள்ளனர். இது, தற்பொழுது மத்தியப் பிரதேச அரசியல் வட்டாரத்தில், பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, பாஜக ஆட்சி செய்யும் கர்நாடகாவிற்கு தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்களை அழைத்துக் கொண்டு சென்ற சிந்தியா, அங்கு தங்குவதற்கும் இடமும், பாதுகாப்பும் கேட்டுள்ளார். அங்கு இருந்து, மார்ச் 10ம் தேதி அன்று, காலையில் மோடியினை சந்தித்தார்.

மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 228 இடங்களில், 105 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் ஆட்சியமைக்க இயலும். தற்பொழுது 19 எம்எல்ஏக்கள் தங்களுடைய ஆதரவினை விலக்கிக் கொண்டுள்ளதாலும், அவர்கள் தங்களுடையப் பதவியினை ராஜினாமா செய்துள்ளதாலும், காங்கிரஸ் கட்சியின் வலிமையானது, 121ல் இருந்து 102 ஆக குறைந்துள்ளது.

தற்பொழுதுள்ள சூழ்நிலையில், விரைவில் கூட உள்ள மத்தியப் பிரதேச சட்டப் பேரவையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்பொழுது பாஜகவிற்கு 107 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. ராஜினாமா செய்யப்பட்ட எம்எல்ஏ தொகுதிகளுக்கு, தேர்தல் நடத்தப்பட்டால் உண்மையில் ஆட்சி யார் அமைப்பார்கள் எனத் தெரியும். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றிப் பெற்றால், 107 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்க இயலும்.

HOT NEWS