பேராசிரியர் க. அன்பழகன் மரணம்! தலைவர்கள் இரங்கல்!

07 March 2020 அரசியல்
kanbazhagan.jpg

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

கடந்த 24ம் தேதி அன்று, அப்பல்லோ மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக, க அன்பழகன் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், க. அன்பழகன் மருத்துவமனையில் இருப்பதனால், தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடாமல் இருந்தார் முக ஸ்டாலின்.

இந்நிலையில், இன்று அதிகாலை ஒரு மணியளவில் சிகிச்சைப் பலனின்றி அன்பழகன் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 98. அவர் இறந்த செய்தியினைக் கேட்ட திமுக தலைவர், நள்ளிரவிலேயே மருத்துவமனைக்குச் சென்றார். பின்னர், அவருக்கு இறுதி மரியாதையை செய்த அவர், க அன்பழகன் உடலினை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன்னால், தன்னுடைய வாகனத்தில் சென்றார்.

அந்த ஆம்புலன்ஸிற்குப் பின்புறம், ஆயிரக்கணக்கான திமுகவினர் வழிநெடுகிலும் வரிசையாக மோட்டார் வாகனங்களில் வந்தனர். கீழ்பாக்கத்தில் உள்ள க. அன்பழகனின் உடலுக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தி.க தலைவர், கி.வீரமணி, டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், திருமாவளவன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் தங்களுடைய இரங்கலையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

HOT NEWS