க பெ ரணசிங்கம் திரைவிமர்சனம்!

03 October 2020 சினிமா
kapaeranasingam.jpg

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில், விருமாண்டி இயக்கத்தில், ஜிப்ரான் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் க பெ ரணசிங்கம். இயல்பான மனிதர்களின் வாழ்வில் எவ்வளவு வலிகள் உள்ளன, அதை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றார்கள் என, இப்படத்தில் இயல்பாக காட்டியிருக்கின்றனர்.

தண்ணீர் கண்டுபிடிக்கும் நபராக விஜய்சேதுபதி, முதல் பாதியில் காமெடியுடன் மாஸூம் காட்டுகின்றார். அவருக்கு ஈடுகொடுத்து, சரிக்கு சரி நடிப்பில் மிரட்டுகின்றார் ஐஸ்வர்யா ராஜேஷ். முதல் பாதியில் இராமநாதபுரத்தில் உள்ள நீர் பிரச்சனை, அதனை எப்படி கார்ப்பரேட் கம்பெனிகள் பயன்படுத்திக் கொள்கின்றன, அந்தப் பிரச்சனைக்கு காரணம் என்ன, நம்ப முடியாத உண்மைகளை இப்படத்தின் காட்டுகின்றனர்.

ஒரு கட்டத்தில், இந்த பிரச்சனைகளுக்கு எதிராக போராட ஆரம்பிக்கும் நபர்கள், ஒவ்வொருவராக விஜய்சேதுபதியினை விட்டு விலகிச் செல்வதும், அதனைத் தொடர்ந்து, வேறு வழியில்லாமல் பிழைப்பிற்காக துபாய் செல்கின்றார் விஜய்சேதுபதி. அங்கு நடைபெறுகின்ற கலவரத்தில் அவருடைய உயிரும் பிரிகின்றது. அங்கு இறந்த அவருடைய உடலினை, எவ்வாறு அவருடைய மனைவியான ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தியா கொண்டு வருகின்றார். அதற்காக அவர் என்னென்ன செய்கின்றார் என்பது தான் படத்தின் மீதிக் கதை.

படத்தில் வரும் வசனங்கள் வலியுடன் கூடிய வலிமையினை விவரிக்கின்றன. படத்தில் வருகின்ற பின்னணி இசை, தெளிவாகவும் கச்சிதமாகவும் பொருந்தியுள்ளது. இதற்கு ஜிப்ரானிற்குத் தான், இயக்குநர் நன்றி தெரிவிக்க வேண்டும். அரியநாச்சி என்ற வலிமையானக் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பட்டையைக் கிளப்பி உள்ளார். விஜய்சேதுபதியா, ஐஸ்வர்யா ராஜேஷா என போட்டிப் போட்டு நடித்துள்ளனர்.

சாதாரண மனிதர்களின் எதார்த்த வாழ்க்கையினையும், பொதுமக்களின் இயல்பினையும் வெட்ட வெளிச்சமாக தோலுரித்துக் காட்டியுள்ளது கபெ ரணசிங்கம்.

ரேட்டிங் 3.2/5

HOT NEWS