பத்தாம் வகுப்புத் தேர்வு! விரிவான விளக்கம் விரைவில் வெளியாகும்!

15 May 2020 அரசியல்
sengottaiyanka.jpg

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு குறித்த விரிவான அறிவிப்பானது, விரைவில் வெளியாகும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடைபெறும் என, தமிழக கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார். இந்நிலையில், பிரதமர் மோடி வருகின்ற மே-17ம் தேதிக்குப் பிறகு, ஊரடங்கானது நீட்டிக்கப்படுகின்றது. இந்த சூழ்நிலையில், சிபிஎஸ்இ, ஜேஇஇ, நீட் தேர்வுகள் நடைபெறும் தேதியானது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்துப் பேசிய கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், வருகின்ற மே-19ம் தேதி அன்று பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு குறித்த விரிவான அறிக்கை வெளியாகும். அதில், தேர்வு நடத்துவது குறித்தும், வெளியூர்களில் இருந்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வசதிகள் குறித்தும் இடம்பெறும். இது குறித்துப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

விரைவில் நல்ல முடிவு வெளியாகும். கேரளா, குஜராத் போன்ற மாநிலங்களில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வருகின்றது. எனவே, யாரும் பயப்பட வேண்டாம். நீட் பயிற்சியானது விரைவில் ஆரம்பமாகும். அதற்கு தற்பொழுது பள்ளி ஆசிரியர்கள் தயாராகி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

HOT NEWS