காப்பான் திரைவிமர்சனம்!

20 September 2019 சினிமா
kaappaan.jpg

ரேட்டிங் 3.5/5

தொடர்ந்துப் பல சொதப்பலான படங்களை கொடுத்து வந்த சூர்யாவுக்கு, இந்தப் படம் நல்ல மகிழ்ச்சியை அளிக்கும் என்றால், அது மிகையாகாது. அதனால், இந்தப் படத்தினைப் பற்றி அவர் பெரிதும் பேசவில்லை. ஏனெனில் அவருக்குத் தெரியும், இந்தப் படத்தின் வெற்றி எப்படிப்பட்டதாக இருக்கும் என்று.

படத்தின் ஆரம்பத்தில் கிராமத்து விவசாயியாக வருகிறார் சூர்யா. கதிர் என்றப் பெயருடன் வலம் வருபர் சட்டென்று, பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாக மாறி, நம்மை ஆச்சர்யப்படுகிறார். பின்னர் தான் தெரிகிறது அவர் யார் என்று. பிரதமராக இருக்கும் மோகன்லாலைக் கொன்று விடுகின்றனர். அவருடைய இடத்திற்கு, அவருடைய மகன் ஆர்யா வருகின்றார். அவரையும் கொல்லத் துடிக்கின்றனர். அவரை சூர்யா காப்பாற்றினாரா? இல்லையா? கொல்பவன் யார்? அவனை கண்டுபிடித்துத் தண்டித்தாரா? என்பது தான் படத்தின் கதை.

என்னடா இது, பழையாக் கதையா இருக்கே? இதுக்கு எதுக்கு இவ்வளவு மதிப்பெண்கள் என, சலிப்படைய வேண்டாம். படம் உண்மையிலேயே ப்ரஷ்ஷாக உள்ளது. அனைவரும், தன்னுடைய குடும்பத்துடன் சென்று, சந்தோஷமாகப் பார்க்கும் விதத்திலேயே இப்படமும் உள்ளது. பிரதமரின் பிஏவாக சாயிஷா நடித்துள்ளார். படத்தில் காதல் இருந்தே ஆக வேண்டும் என்பதற்காக, இந்தக் கதாப்பாத்திரம் திணிக்கப்பட்டு இருந்தாலும், அழகாகவே உள்ளது.

படத்தில் வரும் சண்டைக் காட்சிகளை நாம் அனைவருமே பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் எடுத்து இருக்கின்றனர். கொஞ்ச நாளாக பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பற்றி நம் தமிழ் சினிமா மறந்து இருந்தது. இப்படத்தில், அதனை மீண்டும் கொண்டு வந்துவிட்டனர். படத்தின் காட்சிகளை மிக அருமையாக உள்ளன. பார்ப்பதற்கு மிகவும் ப்ரஷ்ஷான உணர்வினைத் தருகின்றது.

பிரதமரின் பாதுகாப்பு குழுவின் அதிகாரியாக, சமுத்திரகனியும் அசத்தியுள்ளார். சண்டைக் காட்சிகள், காதல், விவசாயம், கார்ப்பரேட், தீவிரவாதம் என எவ்வளவுப் பிரச்சனைகளை பிரதமர் எதிர் கொள்ள வேண்டி உள்ளது என்பதை, இப்படத்தின் மூலம் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

படத்தின் அனைத்துக் கதாப்பாத்திரத்தையும், சரியாகத் தேர்வு செய்துள்ளார் இயக்குநர் கேவி ஆனந்த். விவசாயியாக வரும் கதிர், அனைவரையும் ரசிக்க வைக்கின்றான். விவசாயத்தின் அவசியத்தைப் பற்றியும் பேசுகின்றான்.

காப்பான் ரசிகர்களின் நம்பிக்கையை காப்பான்.

HOT NEWS