யார் இந்த கட்டாக் வீரர்கள்! லடாக்கில் களமிறக்கப்படுவதன் பின்னணி!

03 July 2020 அரசியல்
ghadaksoldiers.jpg

இந்தியாவின் லடாக் பகுதிக்கு, தற்பொழுது கட்டாக் படை வீரர்களும் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், லடாக் பகுதியில் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டு வருகின்றது. இரு நாட்டு இராணுவமும், தங்களுடையத் துருப்புகளை லடாக் மற்றும் லே பகுதியில் குவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், சீனாவின் குங்பூ இராணுவ வீரர்களும் அப்பகுதியில் களமிறக்கப்பட்டு உள்ளனர். மேலும் அந்நாட்டு இராணுவ வீரர்களுக்கு தற்காப்புக் கலையைக் கற்றுத் தருவதற்கு, பயிற்சியாளர்களும் லடாக் பகுதிக்கு, சீன இராணுவத்தால் அனுப்பப்பட்டு உள்ளனர்.

அவர்களை சமாளிக்கும் பொருட்டு, இந்தியாவின் கட்டாக் வீரர்கள் தற்பொழுது லடாக் பகுதியில் களமிறக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தற்காப்புக் கலையில் தன்னிகரற்ற வீரர்களாக பார்க்கப்படுகின்றனர். இவர்கள், ஆயுதங்களுடனும், ஆயுதங்கள் இல்லாமல் வெறும் கைகளிலும் சண்டையிடுவதில் வல்லவர்கள் ஆவர். இவர்கள், படைப் பிரிவானது சத்தமின்றி, அனைத்து எல்லைப் பகுதிகளிலும் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது.

தரைப்படையில் சிறந்த காமாண்டோக்கள் மற்றும் வீரர்களைத் தேர்வு செய்து, அவர்களை கட்டக் பிரிவிற்கு இந்திய இராணுவம் அனுப்புகின்றது. அவர்களுக்கு கர்நாடகாவில் உள்ள பெலகா பகுதியில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. தொடர்ந்து 43 நாட்கள் தீவிரப் பயிற்சியானது வழங்கப்படுகின்றது. அவர்கள் தினமும் 35 கிலோ எடையுள்ள பொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் தினமும், 40 கிலோமீட்டர் அளவிற்கு ஓடுதல் உள்ளிட்ட கடுமையானப் பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

இவர்களுக்கு பல்வேறுப் பயிற்சிகள் வழங்கப்படும். ஒவ்வொரு கட்டக் படைப் பிரிவிலும் 40 முதல் 45 வீரர்கள் இடம் பெறுவர். இவர்கள் தான், சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிலும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டனர். இவர்கள் தற்பொழுது சீனாவினை எதிர்க்கும் விதமாக, லடாக் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

HOT NEWS