தர்பார் பட நஷ்டத்திற்கு அரசு உதவும்! விநியோகஸ்தர்களுக்காக பேசிய கடம்பூர் ராஜூ! 70 கோடிக்கும் மேல் நஷ்டம்!

04 February 2020 சினிமா
darbarboxoffice.jpg

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் தர்பார். இந்தப் படத்திற்காக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பெரும் தொகையானது சம்பளமாக கொடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனிடையே, இந்தப் படம் நஷ்டம் அடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே தர்பார் படத்தினை வாங்கிய விநியோகஸ்தர்கள், அதனைத் தயாரித்த லைகா நிறுவனத்தினைச் சென்று சந்தித்து பேசியுள்ளனர். அவர்களுக்குப் பதில் அளித்துள்ள லைகா நிறுவனம், இந்தப் படத்தால், எங்களுக்கே 70 கோடி நஷ்டம் ஆகியுள்ளது. இயக்குநர் ஏஆர் முருகதாஸிற்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும் பெரும் தொகையினை சம்பளமாக வழங்கிவிட்டோம். எனவே, அவர்களைச் சென்று பாருங்கள் என்று கூறிவிட்டது.

இதனைத் தொடர்ந்து, ஏ ஆர் முருகதாஸ் வீட்டிற்குச் சென்று பார்த்தால், அவர் இல்லை. அவர் பட சூட்டிங்கிற்காக வெளியூர் சென்று விட்டார் எனத் தெரிய வந்துள்ளது. இதனால், ரஜினியின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவரைப் பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. மேலும், அங்கிருந்த போலீசார் அங்கிருந்த விநியோகஸ்தர்களை அப்புறப்படுத்தி உள்ளனர்.

பின்னர், ராகவேந்திரா மண்டபத்தில், ரஜினியின் தரப்பினர் உங்களுடைய மனுக்களை வாங்குவர் என்றுக் கூறப்பட்டதும், அந்த இடத்திற்குச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு அப்படி யாரும் இல்லாததால் கடும் விரக்தியடைந்துள்ளனர் விநியோகஸ்தர்கள். இதனால், செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தனர். அவர்கள் கூறுகையில், தர்பார் படத்தினை வாங்கி, 64 கோடி ரூபாய் அளவிற்கு எங்களுக்கு நஷ்டம் உண்டாகி உள்ளது. மேலும், எங்களை பெரிய அளவில் அவர்கள் மதிக்கவும் இல்லை. இவ்வாறு, சென்றால் எங்கள் நிலைமை என்ன ஆவது என்று வேதனைத் தெரிவித்தனர்.

இதனிடையே, தர்பார் படத்தின் நஷ்டத்திற்கு, ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டால், அரசு உதவி செய்யும் என, கடம்பூர் ராஜூ கூறியதாக, செய்திகள் பரவி உள்ளன.

HOT NEWS