காஜல் அகர்வாலுக்கு கல்யாணம்! இவர் தான் மாப்பிள்ளை! அறிவிப்பு வெளியானது!

06 October 2020 சினிமா
kajalagarwalmarriage.jpg

நடிகை காஜல் அகர்வால், தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளதாக தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்து உள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள இவர், தற்பொழுது புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளார். அதன்படி, வருகின்ற அக்டோபர் 30ம் தேதி அன்று, தனக்கும், கௌதம் கிச்சலு என்பவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகத் தெரிவித்து உள்ளார்.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளதால், அதிக நபர்களை அழைக்க முடியவில்லை எனவும், இருப்பினும் உங்கள் ஆசிர்வாதத்துடனும், ஆதரவுடனும் தன்னுடைய வாழ்க்கையின் புதிய அத்யாயத்தினை துவங்க உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார். காஜல் அகர்வாலுக்கு திருமணம் நடைபெற உள்ளத் தகவலை அறிந்த அவருடைய ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

HOT NEWS