தொழிலதிபரை திருமணம் செய்தார் காஜல் அகர்வால்! ரசிகர்கள் கவலையுடன் வாழ்த்து!

31 October 2020 சினிமா
kajalwedding.jpg

நேற்று நடிகை காஜல் அகர்வாலுக்கும், தொழிலதிபர் கௌதம் கிச்சலுவுக்கும் மும்பையில் மிக எளிதாக திருமணம் நடைபெற்று முடிந்தது.

தமிழ், தெலுங்கு, பாலிவுட், கன்னடம், மலையாளம் உள்ளிட்டப் பல மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். அவருக்கு இந்திய அளவில் ரசிகர்கள் உள்ளனர். தற்பொழுது இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் காஜல் அகர்வால் நடித்து வருகின்றார். அவரும், இண்ட்டீரியர் டெக்கரேஷன் செய்யும் தொழிலதிபர் கௌதம் கிச்சலுவும் காதலித்து வந்தனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதனை அறிவித்த காஜல் அகர்வால், அவருடைய திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, நேற்று அவர்களுடையத் திருமணம் நடைபெற்றது. ஊரடங்கின் காரணமாக, வெறும் 50 முக்கிய உறவினர்கள் மட்டுமே, இந்தத் திருமண நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் முன்னிலையில், தொழிலதிபர் கௌதம் கிச்சலு, காஜல் அகர்வாலுக்கு தாலிக் கட்டினார். அவர்களுக்கு சமூக வலைதளங்களில், ரசிகர்களும் திரைப் பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து உள்ளனர்.

HOT NEWS