களவாணி-2 திரைவிமர்சனம்!

12 July 2019 சினிமா
kalavaani2.jpg

அது என்னமோ, தெரியல! நம்ம தமிழ் சினிமாவில் பார்ட்-2 படங்கள் ஓடுவதே இல்லை. இந்தப் படமும் அப்படித் தான் இருக்கும் போலிருக்கிறது. ஒன்னுமில்லை. படத்தின் கதை ரொம்ப, ரொம்ப சப்பையானது தான்.

தேர்தலில் நிற்கும் விமல், தேர்தலில் வென்றாரா, ஓவியாவைக் கைப் பிடித்தாரா என்பது தான் படத்தின் கதை. உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. அதில், தன்னுடைய மாமாவையும், ஓவியாவின் தந்தையையும் எதிர்த்து நிற்கிறார் நம்ம களவாணி. ஊர் முழுக்க அவப் பெயர். அம்மா அப்பா ஓட்டுப் போடுறதே அதிசயம் எனும் அளவிற்கு நல்ல பெயர்.

தற்கொலை செய்ய முயற்சிக்கும் ஒருவரைக் காப்பாற்ற, அதனைப் பார்த்து மயங்கி அவர் மீது காதல் கொள்கிறார் நாயகி ஓவியா. சும்மா சொல்லக் கூடாது. படத்தில், தன்னுடைய அழகையும், நடிப்பையும் அவர் நன்றாக காட்டியிருக்கிறார். இருப்பினும், அவர் வரும் காட்சிகள் கொஞ்சம் தான்.

படத்தில் நம்ம பஞ்சாயத்தாக வரும் கஞ்சா கருப்பு, எப்பொழுதும் போல, நம்மை சிரிக்க வைக்கிறார். அவருக்கு இன்னும் நிறைய இடம் கொடுத்திருந்தால், ஒரு வேளைப் படம் வெற்றி பெறலாம். இந்தப் படத்தில் சொல்வதற்கு என்று கூட, பெரிய அளவில் டிவிஸ்ட்டுகள், பிரச்சனைகள் என்று எதுவும் இல்லை. இந்த களவாணி-2விற்கும், களவாணிக்கும் துளி அளவில் கூட சம்பந்தம் இல்லை. புதியக் கதை, புதியக் கதைக்களம். ஆனால், பழைய நடிகர்கள்.

சரண்யா மற்றும் இளவரசு ஆகியோர் களவாணியின் தாய் மற்றும் தந்தையாக நடித்துள்ளனர். அவர்கள் வழக்கம் போல தன்னுடைய யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி, அப்ளாஸ் அள்ளுகின்றனர்.

பாடல்கள் கேட்கும் அளவில் கூட இல்லை. இந்நிலையில், எதற்காக படத்தில் வைத்து அதற்காக வேலை மெனக்கெட்டு செலவு செய்து எடுத்திருக்கின்றார்கள் எனத் தெரியவில்லை. ஒளிப்பதிவு சுமார் ரகம். படம், எந்த ரகம்னு பிரிச்சுச் சொல்லக்கூட முடியல. அழுகப்பழையக் கதை.

ரேட்டிங் 2/5

HOT NEWS