காலிஸ்தான் சீக்கியர்கள் கனடாவில் போராட்டம்! விவசாயி போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு!

30 November 2020 அரசியல்
sikh.jpg

கனடாவில் உள்ள காலிஸ்தான் சீக்கியர்கள், மோடிக்கு எதிராகவும், விவசாயப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் 5வது நாளாக, பஞ்சாபினைச் சேர்ந்த ஒன்றே கால் கோடி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், மோடி அரசு கொண்டு வந்துள்ள விவசாய சீர்திருத்த மசோதாவிற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களுக்கு இந்தியா முழுவதும் தற்பொழுது ஆதரவு அதிகரித்து வருகின்றது. இந்த போராட்டத்திற்கு இந்தியா மட்டுமின்றி, உலகமெங்கும் வாழ்கின்ற சீக்கியர்கள் தங்களுடைய ஆதரவினைத் தெரிவித்து வருகின்றனர்.

கனடா நாட்டில், சீக்கியர்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். அவர்களை கனடாவின் பிரதமர் ஜஸ்ட்டீன் ட்ரூடோ ஆதரித்தும் வருகின்றார். கனடா நாடாளுமன்றத்தில், சீக்கியர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், சீக்கியர்களைக் கொண்டு இயங்கி வருகின்ற காலிஸ்தான் சங்கத்தினைச் சேர்ந்த சீக்கியர்கள், தற்பொழுது அங்கு விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

HOT NEWS