கள்ளக்குறிச்சி எம்எல்ஏ தற்பொழுது திருமணம் செய்துள்ள நிலையில், அவருடையத் தந்தை நீதிமன்றத்தில் ஆட்கொனர்வு மனுவினைத் தாக்கல் செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, நேற்று சௌந்தர்யா என்றப் பெண்னை திருமணம் செய்து கொண்டார். அவர் தன்னுடைய மகளைக் கடத்திச் சென்றுத் திருமணம் செய்து கொண்டதாக, சௌந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் போலீசில் புகார் தெரிவித்தார். பின்னர், கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தார். எதுவும் பலனளிக்காத நிலையில், தற்பொழுது உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவினைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், தன்னுடைய சௌந்தர்யா என்ற மகள், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றார் எனவும், அவரிடம் ஆசைவார்த்தைக் காட்டி ஏமாற்றி, அவரை எம்எல்ஏ பிரபு திருமணம் செய்து கொண்டுள்ளார் எனவும் கூறியிருக்கின்றார். இந்த மனு தற்பொழுது விரைவில் விசாரிக்கப்பட உள்ளது.