மக்கள் நீதி மய்யம் பல்டி! திமுக போராட்டத்தில் கமல் கலந்து கொள்ளமாட்டார்!

23 December 2019 அரசியல்
kamalmeetsstudents.jpg

நாளை (23-12-2019) திங்கட் கிழமை அன்று, திருத்தப்பட்ட தேசிய குடியுரிமை மசோதாவினை எதிர்த்து, திமுகவும் அதன் கூட்டணிக் கட்களும் போராட்டம் நடத்த உள்ளன. அதற்காகப் பல அமைப்புகளுக்கு, திமுக தலைவர் முக ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக சென்னை கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்திய பொழுது, அவர்களை சந்தித்த கமல்ஹாசன், திமுக நடத்தும் போராட்டத்தில் அவர்கள் அழைத்தால் நான் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வேன் எனக் கூறினார்.

அவர் அவ்வாறு கூறியதனைத் தொடர்ந்து, அவரை சந்தித்த திமுக உறுப்பினர் ஆர்.எஸ்.பாஸ்கர், போராட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை வழங்கினார்.

இந்நிலையில், தற்பொழுது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனால், கமல்ஹாசன் ஏன் போராட்டத்தில் கலந்து கொள்வேன் எனக் கூறினார் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. யாருடைய வற்புறுத்தலாலோ அந்தப் போராட்டத்தில் இருந்து அவர் பின் வாங்கியுள்ளார் எனப் பலரும் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். இது குறித்து, விளக்கமளித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி, கமல்ஹாசன் தனது சொந்த விஷயத்திற்காக வெளிநாடு செல்கின்றார். மேலும் இந்த விஷயத்தில், வலதுசாரிக்கு ஆதரவாகவோ அல்லது இடதுசாரிக்கு ஆதரவாகவோ இல்லாமல், மையமாக சிந்திக்க விரும்புகின்றோம். எனவே, இந்தப் போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.

HOT NEWS