நடிகர் விஜய் பேசியதற்கு, மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர், கமல்ஹாசன் ஆதரவு அளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், தாய் மொழி மீது கை வைத்தால் கண்டிப்பாக மன்னிக்கக் கூடாது என்றார். மேலும், பேசிய அவர், விபத்தாக ஆங்கில மொழிக் கிடைத்தாலும், அது நன்மையாகவே முடிந்தது. அடிமையாக இருந்த போதிலும், ஆங்கில மொழியை வைத்து நாம் வேறு கருவி செய்து கொண்டோம்.
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு, மூன்று ஆண்டு விலக்குக் கொடுத்துள்ளனர். கல்வித் துறையில் சரியான சீர்த்திருத்தம் வேண்டும் எனவும் கூறினார்.
அப்பொழுது, பத்திரிக்கையாளர் ஒருவர், சுபஸ்ரீ இறந்ததற்கு, யாரைக் கைது செய்ய வேண்டுமோ, அவரை விட்டுவிட்டு, பேனர் பிரின்ட் செய்தவர்களை கைது செய்துள்ளனர் என பிகில் பாடல் வெளியீட்டு விழாவில், விஐய் பேசியதைப் பற்றிக் கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், சரியான தருணத்தில், சரியான மேடையை நியாயமான ஒரு குரல் கொடுப்பதற்காக பயன்படுத்தி இருக்கிறார் தம்பிக்கு வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார். இதனை தற்பொழுது கமல் மற்றும் விஜயின் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.