அமெரிக்கா தேர்தல்! இந்திய வம்சாவளி பெண் போட்டி!

12 August 2020 அரசியல்
kamalaharris.jpg

வருகின்ற செப்டம்பர் மாதம், அமெரிக்காவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், இந்திய வம்சாவளிப் பெண்ணான கமலா ஹாரீஸ் துணை அதிபருக்கானத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.

அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் சார்பில், ஜோ பிடம் அதிபருக்கானப் பதவிக்கு போட்டியிடுகின்றார். அவரும், டிரம்ப்பும் நேரடியாக மோதி வருகின்றனர். இந்நிலையில், ஜோ பிடனுடன் போட்டியிட்டு தோல்வியடைந்த கமலா ஹாரீஸ் தற்பொழுது, துணை அதிபர் பதவிக்காக முன்னிலைப் படுத்தப்பட்டு போட்டியில் இறங்கியுள்ளார்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை, ஜோ பிடன் அறிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில், துணை அதிபருக்கான தேர்தல் போட்டிக்கு, கமலா ஹாரீஸ் நம் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவர் நம் நாட்டிற்காகப் பல சமூக சேவைகளைச் செய்த மகத்தான ஒருவர் எனக் கூறியுள்ளார். கமலா ஹாரீஸின் பெற்றோர் அமெரிக்காவில் குடியேறியவர்கள்.

அவரின் தாய் இந்தியாவினைச் சேர்ந்தர். தந்தை ஜமைக்காவினைச் சேர்ந்தவர். பல்வேறு சாதனைகளைப் புரிந்த கமலா ஹாரீஸ் தற்பொழுது, அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கும் போட்டியிட்டு வெல்வார் என, அமெரிக்கா வாழ் இந்தியர்கள் கருதுகின்றனர்.

HOT NEWS