தன்னுடையப் பிறந்தநாளை, தன்னுடைய சொந்த ஊரான பரமக்குடியில் குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்கு, புறப்பட்ட கமல்ஹாசன் நேற்று நள்ளிரவு (06-11-2019), மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பொழுது, ரஜினிகாந்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்குப் பதிலளித்த கமல்ஹாசன், "ரஜினிகாந்துக்கு மத்திய அரசு விருது கொடுத்துள்ளதை ஒரே மாதிரியாகத் தான் பார்க்கிறேன். அரசியல் ரீதியாகவும் சரி. நண்பர் என்ற வகையிலும் சரி. தற்சமயம் ரஜினிகாந்த் அவர்களுக்கு விருது கொடுக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை, பின்னாளில் எனக்கும் வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. எனது தந்தை சிலையை நான் வேறு எங்கும் வைக்கவில்லை எனது இல்லத்தில் தான் வைத்துள்ளேன். யாருக்கும் இடைஞ்சலாக பொது இடத்தில் வைக்கவில்லையே? அது மட்டுமல்ல எனது தந்தையின் சிலை, வழிபாட்டு சிலை அல்ல என்று கூறினார்.