நேற்று பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ வீட்டிற்கு சென்ற கமல்ஹாசன், அங்கு அவருடைய குடும்பத்தினரைப் பார்த்து ஆறுதல் கூறினார்.
அதிமுகவின் பேனர் விழுந்து ஏற்படுத்திய விபத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்றப் பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை முன்னிட்டு, பல கட்சியினரும், நடிகர்களும் பேனர் மற்றும் பிளக்ஸ்களை வைக்க வேண்டாம் என, கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், திரு. கமல்ஹாசன் சுபஸ்ரீ வீட்டிற்குச் சென்று அவர்களுக்கு, ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், அவர்களுக்கு என்ன ஆறுதல் கூறித் தேற்றுவது என்று தெரியவில்லை. அவர்களுடைய சோகம் கோபமாக மாறுவதற்கு ஏதுவாக, எதையும் கூற வேண்டாம் என்பது தான் என் கருத்து. ஒரே ஒரு பிள்ளையைப் பெற்றவர்கள் அவர்கள், அவர்களுக்கு என்ன சொல்லித் தேற்றுவது என்று தெரியவில்லை.
சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஒரு பக்கம் இருக்கட்டும், அந்தப் பெண் மீது குற்றம்சாற்றுவது கூடாத ஒன்று. மக்கள் நீதி மய்யம் கட்சியினர், இதுவரை பிளக்ஸ் மற்றும் பேனர்கள் வைத்ததில்லை. இனி மேலும், வைக்கப் போவதுமில்லை. என்று கூறினார்.