மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தற்பொழுது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். அவருடையப் பிரச்சாரத்திற்கு பலரும் தங்களுடைய ஆதரவினைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக உள்ளிட்டக் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்குப் போட்டியாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், ஒவ்வொரு ஊராக சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளார். தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு, கட்சியினருடன் பேச்சு உளிட்டப் பல விஷயங்களில் கமல்ஹாசன் ஈடுபட்டு வருகின்றார்.
அவர் தமிழகத்தின் தெற்குப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். இவருக்கு செல்கின்ற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பினை அளித்து வருகின்றனர். இதனை வளர்ந்த கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்டவையே எதிர்பார்க்கவில்லை. அந்த அளவிற்கு இவருக்கு கூட்டம் கூடுகின்றது. இவரும் பல அறிவிப்புகளையும், பலத் திட்டங்களையும் மக்கள் மத்தியில் எடுத்துரைத்து வருகின்றார்.
இவருடைய இந்த சூறாவளிப் பிரச்சாரத்தின் காரணமாக, இவருடைய வாக்கு வங்கியானது கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவருக்கு பொதுமக்கள் தங்களுடைய வரவேற்பினை மட்டுமின்றி, ஆதரவினையும் தெரிவித்து வருகின்றனர். இந்த வரவேற்பும், ஆதரவும் கட்டாயம் தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பது உறுதியாகி உள்ளது.