எவனென்று நினைத்தாய் படத்தில் இணையும் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ்!

16 September 2020 சினிமா
kamal232.jpg

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்பொழுது உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து, புதிய படத்தில் செயல்பட உள்ளனர்.

மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தினை இயக்க உள்ளதாக, சினிமா வட்டாரங்கள் கூறி வந்தன. இந்த சூழ்நிலையில், கமல்ஹாசன் தயாரிப்பில் அவர் படம் இயக்குவார் எனப் பலரும் கூறி வந்தனர். அதுவும் கிட்டத்தட்ட உறுதியான தகவலாக, கோலிவுட் வட்டாரத்தினை சுற்றி வந்தது.

இந்த சூழ்நிலையில், நாளை தன்னுடைய அடுத்தப் படத்தினைப் பற்றிய அறிவிப்பினை வெளியிட உள்ளதாக, லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். இது கமல்ஹாசன் நடிக்கும் படமாக இருக்கும் என்றுக் கூறப்பட்டது. இந்த சூழ்நிலையில், இந்தப் படத்தின் பெயர் எவனென்று நினைத்தாய் என சமூக ஊடகங்களில் அரசல் புரசலாக கூறப்பட்டன.

இதனிடையே, இன்று மாலை ஆறு மணியளவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பினை வெளியிட்டார். ஏற்கனவே சமூக ஊடகங்களில் கூறிய படியே, இப்படத்திற்கு எவனென்று நினைத்தாய் எனப் பெயர் வைத்து உள்ளனர். இந்தப் படத்தில், கமல்ஹாசனை லோகேஷ் இயக்க உள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கும் தற்பொழுது வெளியாகி உள்ளது.

இந்தப் படமானது, முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருக்க உள்ளது. இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்க உள்ளார். இதில், கமல்ஹாசன் தீவிரவாதி அல்லது கம்யூனிசம் பேசும் தலைவராக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரால், கமல்ஹாசனின் ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் சினிமாவின் ரசிகர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இப்படம், சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பே தற்பொழுது பெரும் வரவேற்பினையும், எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS