என்னைப் போல ஜனநாயகமும் தடி ஊன்றி நிற்கின்றது! கமல்ஹாசன் பேட்டி!

18 December 2019 சினிமா
kamalmeetsstudents.jpg

சென்னையில் தற்பொழுது இரண்டாவது நாளாக, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை, இன்று மாலையில் நேரில் சென்று சந்தித்த கமல்ஹாசன் அவர்களுக்கு தன்னுடைய ஆதரவினைத் தெரிவித்தார்.

டெல்லியல் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது, போலீசார் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். இதற்குக் கண்டனம் தெரிவித்து, இந்தியா முழுவதும் உள்ளப் பலக் கல்லூரிகளில், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள சென்னை பல்கலைக்கழக மாணவர்கள், இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட பின்னும், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களை இன்று மாலையில், நேரில் சென்று சந்தித்தார் உலகநாயகனும், மக்கள் நீதிமய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன். ஆனால், அவரை போராட்டம் நடத்தும் மாணவர்கள் இருக்கும் இடத்திற்குள் போலீசார் அனுமதிக்கவில்லை.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கமல்ஹாசன், இந்த மாணவர்களின் போராட்டம் வெறும் பெட்டிச் செய்தியுடன் அடங்கிவிடக் கூடாது. மாணவர்களை அகதிகளாக முயன்று வருகின்றனர். இந்த மாணவர்களின் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியது இந்திய மற்றும் தமிழக அரசின் கடமை. என்னை யார் எனக் கேட்காதீர்கள். நானும் நிரந்தர மாணவன் தான். மாணவர்களின் கேள்விக்குப் பதிலளியுங்கள். இது கட்சிகளுக்கும், ஜல்லிகட்டிற்கும் அப்பாற்பட்ட விஷயம்.

நான் கட்சியின் தலைவனா வரவில்லை. உங்களுக்கு ஒரு அரணாகவே வந்திருக்கின்றேன். நான் தடி ஊன்றி வந்திருக்கின்றேன். ஜனநாயகமும் தற்பொழுது அப்படித் தான் இருக்கின்றது என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS