காஞ்சனா-3 திரை விமர்சனம்!

19 April 2019 சினிமா
kanchana3.jpg

ரேட்டிங் 3.5/5

ரசிகர்களுக்கு ஒரு பேய் படத்தில் எது வேண்டும், எது வேண்டாம் என தெரிந்து வைத்திருப்பதாலேயோ, என்னவோ, காஞ்சனா படங்களை எடுத்து, வெற்றிகளை பெறுகிறார் ராகவா லாரன்ஸ். கோவை சரளா, ஸ்ரீமான், உட்பட அதே குழுவினர் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் காஞ்சனா-3.

இப்படத்தில் அதே காஞ்சனா ஸ்டெய்லை அச்சுப் பிசகாமல் பயன்படுத்தி இருக்கிறார் இயக்குநரும் நாயகனுமான லாரன்ஸ். இப்படத்திலும் வழக்கம் போல, முதல் பாதி ஜாலியாகவும், அடுத்த பாதி சென்ட்டிமென்டாகவும் எடுத்துள்ளார். படத்தில் வரும் பேய் காட்சிகளும் சரி, பேயாக மாறும் காட்சிகளும் சரி அனைவரையும் ரசிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல், அனைவரையும் பயப்படவும் வைக்கிறார் லாரன்ஸ்.

படம் முழுக்க, அதே பழைய காஞ்சனா ஸ்டைல் தான். காதல், காமெடி, கலாட்டா, பிளாஷ் பேக், சென்டிமென்ட் என அனைத்துமே அப்படியே உள்ளது. கதையும் பழைய கதை தான் என்றாலும், அதை எடுத்து இருக்கும் விதத்தில் தான், லாரன்ஸ் ஒரு இயக்குநராக மிளிர்கிறார். உடம்புக்குள் பேய் வரும் பொழுதும் சரி, பேய் இல்லாத உடம்புடன் பேயைப் பத்திப் பேசினால், பயப்படும்பொழுதும் சரி லாரன்ஸ் தன்னை முழுமையாக பயன்படுத்தியுள்ளார்.

படத்தின் இடைவேளையின் பொழுது வரும் காட்சிகள் உண்மையிலேயே சிறப்பாக எடுத்திருக்கிறார்கள் என்று கூறலாம். அந்த அளவிற்கு சிறப்பான ஒரு காட்சியாகவே இடைவேளை உள்ளது. படத்தில் திவ்யதர்ஷினியும், கோவை சரளாவும் சிறப்பாக தங்கள் பங்களிப்பைக் கொடுத்துள்ளனர். ஓவியாவும், வேதிகாவுக்கும் நல்லதொரு வெற்றியை இப்படம் தரும் என்பதில், எவ்வித சந்தேகமும் இல்லை.

தவிர்த்திருக்க வேண்டிய விஷயங்கள்

சூரி வரும் கதாப்பாத்திரம் மட்டுமே மொக்கையான ஒன்று.

படத்தின் நேரம் சற்று அதிகமாக உள்ளது.

லாரன்ஸோட ஸ்டெய்ல்ல சொன்னா காஞ்சனா-3 பக்கா மாஸ்.

HOT NEWS