ரூமை பூட்டியதும் ஆணுறுப்பை காட்டுவர்! கங்கனா ரனாவத் அதிரடி பதிவு!

21 September 2020 சினிமா
kanganaranauthot.jpg

பாலிவுட் நடிகர்கள் தங்களுடைய அறையினை மூடியும், தங்களுடைய ஆணுறுப்பினை வெளியில் எடுத்துக் காட்டுவர் என, நடிகை கங்கனா ரனாவத் அதிரடியான பதிவு ஒன்றினை வெளியிட்டு உள்ளார்.

பாலிவுட் சினிமா மீது, பலரும் தங்களுடைய எதிர்ப்பினையும், எதிர்மறைக் கருத்துக்களையும் நாளுக்கு நாள் அதிகளவில் கூறி வருகின்றனர். நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் மரணமடைந்ததில் இருந்து, தற்பொழுது வரை பாலிவுட் சினிமா பிரபலங்கள் பலர் மீதும், குற்றம்சாட்டப்பட்டு வருகின்றது. நேற்று பயல் கோஷ் என்ற நடிகை, அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறினார். அவர் பேசுகையில், அனுராக் காஷ்யப் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்.

ஒருவர் உங்களுடன் வேலை செய்ய ஒப்புக் கொண்டார் என்றால், அதற்கு அவர் உங்களுடைய வேலைகளை எல்லாம் செய்வார் என அர்த்தமாகாது எனத் தெரிவித்தார். இது குறித்து, நடிகை கங்கனா ரனாவத் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்து உள்ளார். அவர் கூறுகையில், புல்லிவுட்டில் (பாலிவுட்டை விமர்சித்து) பல முன்னணி நடிகர்கள் அப்படித் தான் உள்ளனர். பொம்மைத் திருமணம் போல திருமணம் செய்து கொள்கின்றனர்.

பெயரளவில் கணவன் மனைவியாக வாழ்கின்றனர். பல நடிகர்கள் தினமும் பணம் சம்பாதிக்கின்றனர் என்பதால், மனைவியினை மறந்து, இளம் பெண்களுடன் குதூகலமாக இருக்கின்றனர். எப்பொழுதும், தினமும் புதுப் பெண்களுடன் உல்லாசமாக இருக்கவே விரும்புகின்றனர். ரூம்மிற்குள் சென்றதும், உடனடியாக ஆணுறுப்பினை வெளியில் எடுத்து நடிகைகளிடம் காட்டுகின்றனர் எனக் கூறியுள்ளார். இது பெரிய அளவில் சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS