பாஜகவினர் தமிழகத்தில் நடத்த உள்ள வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என, கனிமொழி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்துள்ள ட்வீட்டில், தமிழ் கடவுளாக கொண்டாடப்படும் முருகனுக்கு யாத்திரை நடத்த வேண்டும் என்று அனுமதி கேட்கும் தமிழக பாஜக, அது போலவே தமிழைத் தேசிய மொழியாக்கவும், கோரிக்கை வைக்குமா எனக் கேள்வி எழுப்பி உள்ளார். இந்த சூழலில், இந்த வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என, உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டு உள்ளது.
தமிழ்க் கடவுளாக கொண்டாடப்படும் முருகனுக்கு யாத்திரை நடத்தவேண்டும் என்று அனுமதி கேட்கும் தமிழக பாஜக, அது போலவே தமிழைத் தேசிய மொழியாக்கவும் கோரிக்கை வைக்குமா? #DMK #திமுக
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) November 4, 2020