நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த திரைப்படத்தில், இவரைத் தவிர மற்ற அனைவருமே புதுமுகம் என்றால் அது மிகையாகாது.
படம் முழுக்க, திருட்டு, காதல், வழிப்பறி, காமெடி என்று நம்மை முழுமையாக ரசிக்க வைத்திருக்கின்றார் இயக்குநர் தேசிங் பெரியசாமி. தன் நண்பன் ரக்சனுடன் இணைந்து, இணையத்தல் பொருட்கள் வாங்கி, பல லட்சம் மோசடி செய்பவர் தான் நாயகன் துல்கர். துல்கருக்கு பியூட்டிசன் தொழிலைச் செய்யும் ரித்து வர்மா மீது, திடீரென்று காதல் வருகின்றது. அவரைக் காதலிக்கின்றார்.
இடையில், ரித்து வர்மா மற்றும் அவருடைய தோழியுடன், துல்கரும் ரக்சனும் கோவா செல்கின்றனர். அப்பொழுது, துல்கரிடம் சொல்லிக்காமல் இரண்டு பெண்களும் எஸ்கேப் ஆகின்றனர். அங்கு வரும், கௌதம் வாசுதேவ் மேனனைப் பார்த்து, துல்கர் கலங்கி நிற்கின்றார். ஏனெனில், இந்தப் படத்தில் கௌதம் மேனன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவரைக் கண்டதும், திருட்டுத் தனத்தால் மாட்டிக் கொண்டோமே என, பதறுகின்றது. அதன் பிறகு என்ன நடக்கின்றது. போலீசிடம் இருந்து தப்பித்தார்களா, காதல் கை கூடியதா என்பதை படமாக எடுத்துள்ளார் இயக்குநர்.
தரமற்றப் படங்களுக்கெல்லாம் பாய்ந்து பாய்ந்து விளம்பரம் செய்யும் தயாரிப்பாளர்கள் ஏன், தரமான படங்களுக்குச் செய்வதில்லை என்ற கேள்வி எழுகின்றது. இந்தப் படம் வெளியானது பலருக்கும் தெரியாது. இந்தப் படத்தின் பாடல்கள் ஹிட்டாகி இருந்தால், ஒருவேளை அனைவராலும் கவனிக்கப்பட்டு இருக்கும். படத்தின் அனைத்துத் துறைகளும் அற்புதமாகவே உள்ளது படத்தின் பாடல்களைத் தவிர.
மொத்தத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ரசிகர்களைக் கொள்ளையடிக்கும்.