சூரிய கிரணகத்தின் பொழுது, குழந்தைகளை மண்ணுக்குள் புதைத்து, விநோத வழிபாடு ஒன்று நடைபெற்று உள்ளது.

26 December 2019 அரசியல்
solareclipsechild.jpg

சூரிய கிரணகத்தின் பொழுது, குழந்தைகளை மண்ணுக்குள் புதைத்து, விநோத வழிபாடு ஒன்று நடைபெற்று உள்ளது.

கர்நாடகாவில் உள்ள கலபுரகி மாவட்டத்தில் அமைந்துள்ள தாஜ்சுல்தான்பூர் என்ற கிராமத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் உடல் ஊனமுள்ளக் குழந்தைகளை எடுத்து, கழுத்தளவுள்ள மண்ணுக்குள் புதைத்துள்ளனர். அவ்வாறு செய்தால், குழந்தைகளின் குறைகள் நீங்கி, சரியாகிவிடும் என நம்புகின்றனர்.

இதற்காக, ஆடு, மாடு கழிவுகள் நிறைந்த மண்ணிலும் நான்கு குழந்தைகளை புதைத்துள்ளனர். கழுத்து அளவு மண் நிறப்பப்பட்டதால், அக்குழந்தைகளால் எங்கும் நகர முடியவில்லை. அக்குழந்தைகள் ஒரு கட்டத்தில் அழுக ஆரம்பித்துவிட்டன. இதில், ஒரு குழந்தை மட்டும் மயக்கம் அடைந்தது. இவ்வாறு செய்வதால், குழந்தைகளின் குறைகள் நீங்கி நன்மை உண்டாகும் என நம்புகின்றனர். குழந்தை மயக்கம் அடைந்ததை அடுத்து, தன்னார்வலர்கள் அக்குழந்தைக்கு முதலுதவி அளித்தனர். இது தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS