கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் சிவக்குமார் கைது!

04 September 2019 அரசியல்
dkshivakumar.jpg

pic credit:twitter.com/DKShivakumar

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான டி.கே. சிவகுமார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பணப் பரிவர்த்தனை முறைகேடு வழக்கில், இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில், குமாரசாமியின் ஆட்சி கவிழும் நிலையில் இருந்த பொழுது, இந்த டிகே சிவகுமார் தான், காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் பேசி சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கர்நாடக பவன் ஊழியர் ஹனுமந்தையா உடன் இணைந்து, பணப்பரிவர்த்தனையில் மோசடி செய்துள்ளதாக அமலாக்கத் துறையினரால், குற்றம் சாட்டப்பட்டார்.

தொடர்ந்து நான்கு முறை அவர்கள் முன்னிலையில் ஆஜராகி, பதிலளித்த டிகே சிவகுமார், தற்பொழுது பணப்பரிவர்த்தனை முறைகேடு சட்டத்தின் கீழ், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அவர், டெல்லியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கனகபுரா சட்டப் பேரவைத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவக்குமார், கடந்த ஆண்டு செப்டம்பரில், இந்தப் பணப்பரிமாற்ற முறைகேட்டில் ஈடுபடத்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

HOT NEWS