வெள்ளத்தில் மூழ்கிய கர்நாடகம்! பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

16 October 2020 அரசியல்
karnatakaflood.jpg

கர்நாடகத்தில் பெய்து வருகின்ற வரலாறு காணாத கனமழையால், அம்மாநிலத்தின் வடக்குப் பகுதி வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலைக் காரணமாக, கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழைக் கொட்டித் தீர்த்து வருகின்றது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களான, கலபுரகி, ராய்ச்சூர், பெலகாவி, பாகல்கோட்டை, கதக் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள நீர் முழுமையாக சூழ்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி, வடகர்நாடகத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளநீரானது, கடும் வேகத்தில் பாய்ந்து செல்கின்றது. இதனால், இந்த மழைக்கு மட்டும் சுமார் 11 பேர் பலியாகி இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹைதராபாத் நகரில் பெய்த மழையால், கார்கள், வாகனங்கள் என பலவும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளன. இது குறித்து, அம்மாநில முதல்வர் எடியூரப்பா, அம்மாநில உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார்.

அம்மாநிலம் மட்டுமின்றி, மஹாராஷ்டிரா மாநிலத்திலும் கடுமையான மழை பெய்து வருவதால், அங்குள்ள வெள்ள நீரும் தற்பொழுது கர்நாடகா வருகின்றன. மஹாராஷ்டிராவில் உள்ள அணைகளும் நிரம்பி வருவதால், அவைகள் திறந்து விடப்பட்டு உள்ளன. அந்த நீர் அனைத்துமே, கர்நாடகா அணைகளுக்கு வருகின்ற காரணத்தால், வெள்ளத்தின் அளவானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

HOT NEWS